search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருத்தி ஏலம்"

    • வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
    • இந்த ஏலத்துக்கு அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 665 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல் நேற்றும் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 665 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

    ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 290 முதல் ரூ.7 ஆயிரத்து 419 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 219 முதல் ரூ.5 ஆயிரத்து 609 வரையிலும் ஏலம் போனது. இவை ரூ.13 லட்சத்து 75 ஆயிரத்துக்கு விற்பனையானது.

    இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர். நேற்று ஏலத்திற்கு டி.சி.எச். ரக பருத்தி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • விற்பனை சங்கத்தில் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது.
    • ஏலத்தில் 220 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.

     அவிநாசி : 

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.4 லட்சத்து 47 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 220 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இதில், ஆா்.சி.ஹெச். பி.டி. ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.6,000 முதல் ரூ.7,569 வரையிலும், கொட்டு ரக (மட்ட ரக) பருத்தி குவிண்டாலுக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.4 லட்சத்து 47 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.

    • வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
    • இந்த ஏலத்திற்கு 433 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்து இருந்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு 433 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்து இருந்தனர். இதில் பிடி ரகம் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.6089 முதல் ரூ.7360 வரையிலும் விலை போனது. இதன்படி ரூ. 8 லட்சத்து 55 ஆயிரத்திற்கு விற்பனை நடைபெற்றது. இதேபோல் 10 மூட்டைகள் எள் விற்பனைக்கு வந்தது. இதில் சிகப்பு எள் கிலோ ரூ.133 முதல் ரூ.166 வரையிலும், கருப்பு எள் கிலோ ரூ.121 முதல் ரூ.157 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ.50 ஆயி ரத்துக்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சராசரியாக 1329.4 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர்.
    • வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.7059.

    பாபநாசம்:

    பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையில் நடைப்பெற்றது பருத்தி ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 1021 லாட் பருத்தி கொண்டுவரப்பெற்றது. சராசரியாக 1329.4 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம்,தேனி, திருப்பூர், சார்ந்த 09 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர் பருத்தியின் மதிப்பு சராசரியாக 0.88 கோடி ரூபாய் ஆகும்.

    இதில் தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.7059, குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.5,409,

    சராசரி மதிப்பு குவிண்டாலுக்கு ரூ.6,279/- என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    • திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
    • பருத்தி, எள் மற்றும் கடலைக்காய் ஏலம் வருகிற 30-ந் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்ற ஏலத்திற்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,732 பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர்.

    இதில் பி.டி. ரகம் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.6,469 முதல் ரூ.7,520 வரையிலும், சுரபி ரகம் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7,300 முதல் ரூ.8,100 வரையிலும் விலை போனது. இதன்படி ரூ.45 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.

    எள்

    இதேபோல் 10 மூட்டை எள் ஏலத்திற்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ரூ.122 முதல் ரூ.169 வரையிலும், சிகப்பு எள் கிலோ ரூ.126 முதல் ரூ.173 வரையிலும், வெள்ளை எள் கிலோ ரூ.143 முதல் ரூ.176 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ.1 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.

    அடுத்த பருத்தி, எள் மற்றும் கடலைக்காய் ஏலம் வருகிற 30-ந் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 150 விவசாயிகள் மேற்பட்ட 800 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர்.
    • ஏலத்தில் ரூபாய் 55 லட்சம் பருத்தி ஏலம் போனது என செயலர் அறிவழகன் தெரிவித்தனர்.

    அரூர்,

    தருமபுரி மாட்டம், அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.

    அரூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை இந்த அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள்.

    இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 150 விவசாயிகள் மேற்பட்ட 800 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர். இந்த வாரம் எம்சி 5 ரக பருத்தி குவிண்டால் ரூ. 7,266 முதல் 7,696 ஏலம் போனது. நேற்றைய. ஏலத்தில் ரூபாய் 55 லட்சம் பருத்தி ஏலம் போனது என செயலர் அறிவழகன் தெரிவித்தனர்.

    • கூட்டுறவு சங்க வளாகத்தில் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் பருத்தி ஏலம் நடந்தது.
    • நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 364 சுரபி ரக பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் அருகே உள்ள அக்கரைப்பட்டி கூட்டுறவு சங்க வளாகத்தில் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் வெண்ணந்தூர், நடுப்பட்டி, சவுதாபுரம், மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, மின்னக்கல், அத்தனூர், தேங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். பல பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகளும் பருத்தியை ஏலம் எடுப்பதற்காக வந்திருந்தனர்.நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 364 சுரபி ரக பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். சுரபி ரகம் குறைந்தபட்சம் குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 301 முதல் அதிகப்பட்சமாக ரூ.8 ஆயிரத்து 147-க்கு ஏலம் போனது. நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் ரூ.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. 

    • இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 480 விவசாயிகள் மேற்பட்ட 2100 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர்
    • 5 ரக பருத்தி குவிண்டால் ரூ. 6,769 முதல் 7,289 ஏலம் போனது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.

    அரூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை இந்த அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள்.

    இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 480 விவசாயிகள் மேற்பட்ட 2100 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர்.

    இந்த வாரம் எம்சி 5 ரக பருத்தி குவிண்டால் ரூ. 6,769 முதல் 7,289 ஏலம் போனது. நேற்றைய ஏலத்தில் ரூபாய் 55 லட்சம் வரை பருத்தி ஏலம் போனது.

    • ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்தாண்டில் பருத்தி ஏலம் தொடங்கப்பட்டுள்ளது.
    • குறைந்தபட்ச விலையாக குவிண்டாலுக்கு 5800 ரூபாயும் மற்றும் சராசரி விலையாக குவிண்டாலுக்கு ரூ.6109 ரூபாய் என ஏலம் நடைபெற்றது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்தாண்டில் பருத்தி ஏலம் தொடங்கப்பட்டுள்ளது.

    விற்பனைக் கூடத்தில் நேற்று மறைமுக பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் பென்னாகரம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 15 விவசாயிகள் கலந்துகொண்டு 114 பருத்தி மூட்டைளை விற்பனைக்குக் கொண்டு வந்தனர்.

    ஒழுங்குமுறை விற்பனைக் கூட மேற்பார்வையாளர்கள் வீரன், சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற மறைமுக பருத்தி ஏலத்தில் பாப்பாரப்பட்டி மற்றும் பென்னாகரம் பகுதி வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    இதில் அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு 6209 ரூபாயும், குறைந்தபட்ச விலையாக குவிண்டாலுக்கு 5800 ரூபாயும் மற்றும் சராசரி விலையாக குவிண்டாலுக்கு ரூ.6109 ரூபாய் என ஏலம் நடைபெற்றது.

    மொத்தமாக 4075 கிலோ எடையுள்ள பருத்தி 2,49,012 ரூபாய்க்கு (இரண்டு லட்சத்து 49 ஆயிரத்து 12 ரூபாய்க்கு)ஏலம் நடைபெற்றது.

    • ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
    • இந்த ஏலத்தில் 1278 பருத்தி மூட்டைகள் ரூ.30 லட்சத்திற்கு விற்பனை ஆனது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆர்.கவுண்டம்பாளையம் பவர் ஹவுஸ் பின்புறம் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகம் உள்ளது. இங்கு பருத்தி ஏலம் நடந்து வருகிறது.

    நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு முத்துக்காளிப்பட்டி, புதுச்சத்திரம், மசக்காளிப்பட்டி, குட்டலா டம்பட்டி, சந்திரசேகரபுரம், முருங்கப்பட்டி, கவுண்டம்பாளை யம், அனைப்பாளையம், வடுகம், குள்ளப்பநாயக்கனூர், சிங்களாந்த புரம், தேங்கல்பாளையம், கரடியானூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    அதேபோல் ராசிபுரம், ஆத்தூர், ஈரோடு, சேலம், பெருந்துறை, திருப்பூர், திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து பருத்தியை ஏலம் எடுத்தனர்.

    ஏலத்திற்கு ஆர்.சி.எச் ரக பருத்தி 1270 மூட்டைகளும், கொட்டு ரக பருத்தி 8 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டு இருந்தன. இதில் 1 குவிண்டால் ஆர்.சி.எச். பருத்தி குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்து 399 முதல் அதிகபட்சமாக ரூ. 6 ஆயிரத்து 885-க்கும்,

    கொட்டு ரக பருத்தி குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரத்து 500 முதல் அதிகபட்சமாக ரூ.4 ஆயிரத்து 50-க்கும் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் 1278 பருத்தி மூட்டைகள் ரூ.30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

    • திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
    • பி.டி. ரகம் பருத்தி குவிண்டாலுக்கு ரூ. 5105 முதல் ரூ. 6510 வரை விலை போனது. 580 மூட்டைகள் ரூ.11 லட்சத்து 64 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் பி.டி. ரகம் பருத்தி குவிண்டாலுக்கு ரூ. 5105 முதல் ரூ. 6510 வரை விலை போனது. 580 மூட்டைகள் ரூ.11 லட்சத்து 64 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எள் 40 மூட்டைகள் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதில் கருப்பு எள் கிலோ ரூ.129 முதல் ரூ.139 வரையிலும் சிகப்பு எள் கிலோ ரூ.129 முதல் ரூ.149 வரையிலும் வெள்ளை எள் கிலோ ரூ.153 முதல் ரூ.159 வரையிலும் விலை போனது. மொத்த தொகை ரூ.3 லட்சத்து 70 ஆயிரத்துக்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 2324 மூட்டை பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
    • கூட்டுறவு சங்கத்தில் ரூ.62 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனதாக சங்க செயலர் அறிவழகன் தெரிவித்தார்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.

    அரூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 2324 மூட்டை பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

    பி.சி. ரக பருத்தி குவிண்டால் ரூ.5,819 முதல் ரூ.6,700 வரை ஏலம் போனது. கூட்டுறவு சங்கத்தில் ரூ.62 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனதாக சங்க செயலர் அறிவழகன் தெரிவித்தார்.

    ×